Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படும் பொருள்


ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் உணவு பொதியிடலுக்காகப் பயன்படுத்தப் படும் உக்காத லஞ்சீற்களுக்குத் தடை விதிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் அனைத்துக் கடைகளிலும் உக்கும் Biodegradable லஞ்சீற்களை மாத்திரமே விற்க முடியும்.

இது போன்ற உக்கும் பொலித்தீன்களை உணவு பொதியிடலுக்காக பயன்படுத்து வதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உக்காத லஞ்சீற்கள் அடுத்த மாதம் முதல் தடை செய்யப்படும், அத்தோடு, அந்த லஞ்சீற் உற்பத்தி மற்றும் விநியோகமும் தடை செய்யப்படும்.

மேலும், தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொலித்தீன் தாள்களை மாத்திரம் விற்பனை செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Source: தினக்குரல்.

Post a Comment

0 Comments