Ticker

6/recent/ticker-posts

Advertisement

Responsive Advertisement

பொலிஸ் அதிகாரிகள் தவறு செய்யவில்லை: சுகாதாரத்துறைதான் காரணம்: - சரத் வீரசேகர


சட்டவிரோத போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்திருப்பது சுகாதாரத் பிரிவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகளின் தவறு இல்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடுவலையில் புதிய பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.

“பொலிஸ் ஒருபோதும் அவர்கள் விரும்பியபடி சட்டத்தை மீறி தன்னிச்சையாக செயல்படவில்லை. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில் பொலிஸ் செயல்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். நோய் பரவுல் காரணமாக அனைத்து போராட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். அன்று காலை போராட்டக்காரர்களிடம் சொன்னோம். நாங்கள் பதாகைகளை வைத்தோம். ஒலிபெருக்கி மூலம் வர வேண்டாம் என்று கூறினோம். இது போன்ற ஒரு உத்தரவு இருப்பதாக கூறினோம். அதையெல்லாம் கேட்காமல், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி போராட்டத்தில் பங்கேற்றனர். பொலிஸார் அவர்களை இதன்போதுதான் கைது செய்தனர். பொலிஸார் விரும்பியதால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படவில்லை. இவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்களால் அனுப்பப்பட்ட எழுத்து மூல ஆவணம் எங்களிடம் உள்ளது. அதைத்தான் நாங்கள் செய்தோம். எனவே, அதற்காக யாரும் பொலிஸை குறை கூற முடியாது. ”
Source: அததெரண.

Post a Comment

0 Comments