Ticker

6/recent/ticker-posts

Advertisement- Leader Board

தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

 


தனிமைப்படுத்தல் சட்டம் அனைவருக்கும்சமனானது   என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு நாடு ஒரு சட்டம் என்றவகையில் செயற்பட்டால்
நாடு செயற்பட்டால் சகல நபர்களுக்கும் தனிமைப்படுத்தல் சட்டம் சமனான அமைய வேண்டும்.
ஆனால், கடந்த காலங்களில் நாங்கள் அவதானித்தோம் நாட்டில் முக்கிய பிரமுகர்கள்  மரண சடங்களில் கலந்து கொண்ட விதம்.
அத்தோடு, அரச கட்சிகளில் ஆளுகாட்சிகள் மற்றும் எதிர்க் கட்சிகள் தங்களில் அரசியல் நிகழ்வுகள் மற்றும் அரசியல் கட்சி களின் கூட்டங்களின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகள் கடைப்பிடித்த விதம் நாம் அறிந்தோம்.
ஆனால், கடந்த வாரம் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகம் தொடர்பான புதிய சட்ட மூலம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வீதிக்கு வந்தபோது தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டதா தெரிவித்து கைது செய்யப்பட்டுத் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ​​
தனிமைப்படுத்தல் சட்டத்தைச் செயற்படுத்தும் அதிகாரி என்ற வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய ‍அசேல குணவர்தன தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பாதுகாப்பது அவரின் பொறுப்பான கடமையாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.
Source: தினக்குரல்.

Post a Comment

0 Comments