Ticker

6/recent/ticker-posts

Advertisement- Leader Board

பொருட்களின் விலை அதிகரிப்புகள்: ஒரே பார்வையில்...

 


லிட்ரோ சமையல் எரிவாயு:

நேற்று(10) நள்ளிரவு முதல் 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது. 

இதற்கமைய, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் புதிய விலை 520 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டது.


லாஃப்ஸ் சமையல் எரிவாயு:

லாஃப்ஸ் வீட்டு சமையல் எரிவாயு விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, 12.5 கிலோ சமையல் எரிவாயுவின் விலை  984 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. அவ்வாறே, 5 கிலோ எரிவாயுவின் விலை 393 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 2,840 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 1,136 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டது.


கோதுமை மா:

இன்று முதல் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சீமெந்தின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது:

50 கிலோ சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் விலை 1,098 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


உணவக உற்பத்திகள்:

உணவக உற்பத்திகள் சிலவற்றின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொத்து, ஃப்ரைட் ரைஸ், பால் தேநீர் மற்றும் உணவுப்பொதி என்பவற்றின் விலைகளை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.


லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைப்பு:

நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயுவின் விலை 75 ரூபாவினால், 5 கிலோ எரிவாயுவின் விலை 30 ரூபாவினாலும், 2.5 கிலோ எரிவாயுவின் விலை 14 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விலைக் குறைப்பின்படி, 12.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 2,675 ரூபாவாகவும், 5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 1,071 ரூபாவாகவும், 2.5 கிலோ எரிவாயுவின் புதிய விலை 506 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


பாணின் விலையும் அதிகரிப்பு:

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி 450 கிராம் பாணின் விலை 5 ரூபாவினாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலை 10 ரூபாவினாலும், கேக் கிலோவொன்றின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தது.





Post a Comment

0 Comments